திங்கள், 4 பிப்ரவரி, 2013

கன்னித்தமிழ் புகழ்

கடல் மட்டுமே என்
கன்னித்தமிழே உன் புகழை
அலைகொடுத்து ,
ஆரவாரிக்கிறது இடையாறது
என்னைவிட...,

தமில்!

மன்னித்துவிடு ஸாரி*

 என்று சொல்லி
மண்டியிட்டு கிடக்கிறது

 என் அன்னை தமிழ் !

சம்பிரதாயம்...!!!

ஒருவர்
ஒரு புதிய பொருளை உருவாக்கிட
பல வருடங்களையும்
பல லட்சங்களையும்
செலவு செய்தார்
அப்பொருளை விற்றிடவும்
பல லட்சம்
செலவு செய்தார் .....

ஆனால் ,
விற்ற பிறகு
ஒரு பைசா கூட
கைக்கு வரவில்லை
புதிதாக திருமணமான
பெண்ணின் தந்தைக்கு....!!!

தமிழ் தாய்


கவிதை வள்ளலாக

 நீ இருப்பதனாலேயே
கை நீட்டி பிச்சை

 கேட்கிறேன் 

இன்னுமொரு கவிதை தா

தமிழ் மொழி

தமிழ் மொழிக்கு 

ஒற்றைச் சொல்லில்
உயிர் எனக்கேட்டால்
தருவேன்
தமிழ் மொழிக்கு எனதுயிரை !

பயணம்


பிரிந்தே கிடக்கிறோம்
தினம் ஆயிரம் உறவுகளை ஒன்று சேர்க்க

தண்டவாளங்கள்!!!

தமிழ் தேனை விட இனியது


தேர்வு நடந்தது
விளக்க உரை எழுதுக : 

தமிழ்
இதுதான் கேள்வி

விடை எழுதினேன் : தேன்

தவறு என்று பூசிய மதிப்பெண் பெற்றேன்

ஏன் என வினவினேன் திருத்தியவரிடம்

தமிழ் தேனை விட இனியது

தெரியாதா உனக்கு என்றார்....